உயர்பண மதிப்பிழப்பு: சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனைகள் 6 மடங்கு உயர்வு

உயர்பண மதிப்பிழப்புக்குப் பின், சந்தேகத்துக்கு இடமான வகையில் நடைபெற்ற பரிவர்த்தனைகளின் அளவு 6 மடங்கு உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை அடிப்படையில், நிதி அமைச்சகத்தின் பொருளாதார புலனாய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்துள்ளது. சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 361 லிருந்து 3 லட்சத்து 61 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

காப்பீடு, சிட்ஃபண்ட், பங்குச்சந்தை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் அடிப்படையில் இந்தவிவரம் தெரிய வந்துள்ளது. போலி ஆவணங்களைக் கொடுத்தல், பயன்பாடற்றுக் கிடந்த கணக்குகளில் பரிவர்த்தனை, பொருட்களை வாங்குதல், பணத்தை செலவிடுதல் உள்பட பல்வேறு காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன