உயரமான பாலத்தின் மீதிருந்து குதித்த வீரர்கள்

போஸ்னியா நாட்டில் நடந்த கிளிஃப் டைவிங் போட்டியில், ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

மோஸ்டர் நகரை ஊடறுத்து பாயும் நெரிட்வா ஆற்றின் ((NERETVA RIVER)) குறுக்கே அமைந்துள்ள பழமையான, உயரமான பாலத்தின் மீதிருந்து குதித்து, அந்தரத்தில் குட்டிக்கரணங்கள் அடிக்க வேண்டுமென்பது விதி. இதில் போஸ்னியா மட்டுமின்றி, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் களமிறங்கி, பார்வையாளர்களை வியக்கச் செய்தனர்.

இங்கிலாந்து வீரர் ப்ரைடன் கேரி ஹன்ட் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். இந்தப் போட்டியின் அடுத்த சுற்றுப் போட்டி சிலி நாட்டில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!