உத்தரப்பிரதேசம், போலீசாருக்கும்-மாணவர்களுக்கும் இடையே மோதல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, போலீசார், பத்திரிக்கையாளர் உள்ளிட்ட 32 பேர் காயமடைந்தனர்.

மவ் (Mau) பகுதியில் அதிவேகமாக வந்த டிரக் மோதியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததார். மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் அரசுப் பேருந்து, லாரிகள் உள்ளிட்டவற்றை தீ வைத்துக் கொளுத்தினர். அத்துடன், அவ்வழியே சென்ற வாகனங்களையும் சூறையாடினர். இதையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினரையும் கல்வீசித் தாக்கியதால், போலீசார் மாணவர்களைத் துரத்தித் துரத்தி தடியடி நடத்தினர்.

இதில் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 24 பேரும், காவல்துறையினர் 6 பேரும், பத்திரிக்கையாளர்கள் இருவரும் காயமடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன