உட்லேண்ட்ஸ் திரையரங்கு அருகே மின்மாற்றியில் சிக்கிய ஊழியர் தீயணைப்புத்துறையினர், போலீசார் மீட்டனர்

சென்னை ராயப்பேட்டையில் மின்மாற்றில் சிக்கிய காயமடைந்த ஊழியரை, தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் இணைந்து மீட்டனர். ராயப்பேட்டை உட்லேண்ட்ஸ் திரையரங்கு அருகே உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதை அடுத்து, அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உசேன், கலீம் பாய், கன்னியப்பன், ராஜீ ஆகியோர், வீடுகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் டிரான்ஸ்பார்மரை அணைத்து மேலே ஏறி, பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மின்மாற்றிக்கு மின்சாரம் வரும் கம்பியில் உசேனின் கைப்பட்டு, மின்சாரம் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.

இதையடுத்து, மற்ற ஊழியர்கள் அவசர அவசரமாக கீழே இறங்கிய நிலையில், மின்சாரம் தாக்கி இடது கையும், இடதுகாலும் செயல்படாததால், உசேன் கீழே இறங்க முடியாமல் தவித்தார். இதையடுத்து, சக ஊழியர்கள் அளித்த தகவலின்பேரின் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து, டிரான்ஸ்பார்மர் மேலே சிக்கிய உசேனை பத்திரமாக மீட்டனர்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், உசேனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உட்லேண்ட்ஸ் திரையரங்கு எதிரே உள்ள மின்மாற்றிக்கு அண்ணாசாலையில் உள்ள பெரிய மின்மாற்றியில் இருந்துதான் மின்சாரம் வருவதாகவும், அதை அணைக்காமல், இங்கு பணியில் ஈடுபட்டதே விபத்துக்கு காரணம் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன