Advertisement

உடல்நலம் குன்றிய நிலையில் மயங்கிச் சாய்ந்த குட்டியானைக்கு சிகிச்சை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உடல்நலம் குன்றிய நிலையில் நடக்க முடியாமல் உடல் நலிவடைந்த குட்டியானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குட்டியானையை விட்டு பிரியாத தாய் யானை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே சுற்றி சுற்றி வருகிறது. கடம்பூர் மலைப் பகுதிக்கு அருகே உள்ள விளைநிலத்தில், குட்டியானை ஒன்று உடல்நலம் குன்றிய நிலையில் படுத்துக் கிடந்தது. இதனருகே சோகத்துடன் நின்ற தாய் யானை யாரையும் நெருங்கவிடாமல் ஆவேசமாக துரத்தியது. குட்டியானைக்கு சிகிச்சை வழங்குவதற்காக வந்த வனத்துறையினர் பலமுறை போராடிய பின் தாய் யானையை பட்டாசு வெடித்துவிரட்டினர். எனினும் அருகிலுள்ள வேலிமறைவில் நின்று தன் குட்டியை தாய் யானை கண்காணித்து வருகிறது. இதனையடுத்து குட்டியானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 வயது மதிக்கத்தக்க அந்த குட்டியானை வாய்ப்புண் ஏற்பட்டதால் தீவனம் உட்கொள்ள முடியாமல் சோர்வடைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன