Advertisement

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கருத்து வேறுபாடு நீடிக்கிறது-சந்திப்பு நிகழ்ச்சியில் நீதிபதி செல்மேஸ்வரர் பங்கேற்கவில்லை

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நீதிபதிகள் நேற்று அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் இக்கூட்டத்தில் புகார் அளித்த முக்கிய நீதிபதியான செல்லமேஸ்வர் பங்கேற்கவில்லை. மற்ற நீதிபதிகள் மூவரும் தலைமை நீதிபதியுடன் சந்தித்த நிகழ்வு 15 நிமிடங்களிலேயே முடிந்து விட்டது.

இதனால் நீதிபதிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாத இழுபறிநிலை நீடிக்கிறது. இப்பிரச்சினை இன்னும் ஒருவாரத்திற்கு தீர வாய்ப்பில்லை என்று நீதிபதிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படுவதாக நான்கு நீதிபதிகளும் கூட்டாக புகார் தெரிவித்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன