ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் பதூஷ் சிறையில் அடைபட்டிருக்க வாய்ப்பு-சுஷ்மா சுவராஜ்

ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் பதூஷ் நகரில் சிறையில் அடைபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் கடந்த 2014ம் ஆண்டு மருத்துவமனை கட்டுமானப் பணிக்காகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் 39 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பது உறுதியாகத் தெரியாமல் இருந்து வந்த நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரம் விடுவிக்கப்பட்டது.

ஈராக்கின் மொசூல் நகரம் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள சுஷ்மா சுவராஜ், அருகே உள்ள பதூஷ் நகரில் உள்ள சிறைச்சாலையில், ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் சிறை வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது பதூஷ் நகரில் சண்டை நடந்து வருவதால் எதையும் உறுதியாக கூற முடியவில்லை என்றும் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன