Advertisement

இஸ்ரேல் தலைநகரை ஜெருசலேமுக்கு மாற்ற வலுக்கும் எதிர்ப்பு

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை, ஜெருசலேம் நகருக்கு மாற்றும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தப் பேரணியில் பங்கேற்ற 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான வாசகங்கள் பொறிக்கப்பட்ட தொப்பிகளை அணிந்தும், ட்ரம்பிற்கு எதிரான முழக்கங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியும் தங்களது உணர்வை வெளிப்படுத்தினர். ட்ரம்ப் தனது முடிவை திரும்பப் பெறும் வரை இந்தோனேசியர்கள் அமெரிக்க பொருட்களை வாங்கக் கூடாது என வலியுறுத்தி பேரணியின் முடிவில் தீர்மானம் நிறைவேற்றினர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன