இளம்பெண் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்

உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கோரக்பூரில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் நுழைந்த இளைஞர், ஒரு வீட்டின்மீது கல்வீசி விட்டு ஏதோ கூச்சலிடுகிறான். இதைக் கேட்டு வெளியே வந்த இளம்பெண்ணை, அந்த நபரும், புதிதாக வந்த மற்றொரு நபரும் அடித்து உதைக்கின்றனர். இதைத் தடுக்க முயலும், இளம்பெண்ணின் தாயார் மீதும் தாக்குதல் அரங்கேறுகிறது.

அங்குள்ள சிசிடிவி கேமராவில் இந்த தாக்குதல் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்த புகாரின்பேரில், கோரக்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன