இளம்பெண்ணை கத்திமுனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே காதலனுடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கத்திமுனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரை கைது செய்த போலீசார், 2 பேரை தேடி வருகின்றனர். பவூஞ்சூர் அடுத்த சீக்கினாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கூவத்தூரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

நேற்றிரவு வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட அவரை பேருந்து நிலையத்தில் விடுவதற்காக, அவரது காதலர் ஹோம்நாத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கூவத்தூர் பகுதியை சேர்ந்த பீமராவ், தினேஷ்குமார், தஸ்ணாமூர்த்தி, விஜி, தயாநிதி, கதிரவன் ஆகிய ஆறு பேர் ஹோம்நாத்தை சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

பின்னர் அந்த இளம்பெண்ணை மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று கத்தி முனையில் மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண், அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று, நடந்ததைக் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பீமராவ், தினேஷ்குமார், தஸ்னாமூரத்தி, கதிரவன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவான விஜி, தயாநிதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன