Advertisement

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளி விஜய்க்கு பதிலாக ஷிகார் தவான் அணியில் சேர்ப்பு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முரளி விஜய்க்கு பதிலாக ஷிகார் தவான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு இருபது 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முரளி விஜய் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய தொடரின் போது முரளி விஜய்-க்கு மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணம் அடையாததால் அவருக்குப் பதிலாக ஷிகார் தவான் சேர்க்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன