Advertisement

இரு பிரிவினருக்கு எதிராக மோதலை தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் பாரதி ராஜா மீது வழக்குப் பதிவு செய்யலாம்

இரு பிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் பாரதிராஜா மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் திரைப்பட விழா ஒன்றில் விநாயகரை இறக்குமதி கடவுள் என விமரிசித்த பாரதிராஜா, கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையெடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார்.

இந்நிலையில் பாரதிராஜாவுக்கு எதிராக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, பாரதிராஜா மீதான புகாரை விசாரிக்கவும், முகாந்திரம் இருப்பதாக தெரிந்தால் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன