இரண்டு கொலை வழக்குகளில் ராம் ரஹீம் மீது இன்று விசாரணை

டேரா சச்சா சவுதா தலைவரான ராம் ரஹீம் மீது இரண்டு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் விசாரணை இன்று நடைபெறுகிறது.

ஹரியானா மாநிலம் சிரிசாவில் உள்ள டேரா சச்சா ஆசிரமத்தில் சோதனை நடத்திய போலீசார், பத்திரிகையாளர் ராம்சந்தர் மற்றும் முன்னாள் டேரா நிர்வாகி ரஞ்சித் சிங் ஆகியோர் கொலைகளில் ராம் ரஹீமுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர்.இந்த கொலைவழக்குகளின் விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜக்தீப் சிங் முன்னிலையில் இன்று நடைபெறுகிறது. பஞ்ச்குலாவில் போலீசாரும் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ராம்ரஹீமுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *