Advertisement

இரட்டை இலை தொடர்பான இருதரப்பு வாதங்கள் நிறைவு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அ.தி.மு.க.வின் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் தரப்பினர் உரிமை கோரிய வழக்கில் 7 கட்டங்களாக நடைபெற்ற விசாரணை கடந்த புதன் கிழமை முடிவடைந்தது.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இருதரப்பினரும் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, என்னென்ன வாதங்கள் நடந்ததோ அதனை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளதாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வாதத்தில் இடம்பெறாத தகவல்களையும் முதலமைச்சர் தரப்பினர் வழங்கியுள்ளதாக டிடிவி தினகரன் தரப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து விரைவில் தேர்தல் ஆணையத்தின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன