Advertisement

இமாச்சலப் பிரதேசம், குஜராத் தேர்தல் வெற்றியை பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை அக்கட்சியினர் வெடிகள் கொளுத்தியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

குஜராத்தில் 20ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் உள்ள பாஜக இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறும் நிலையில் உள்ளது. அதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற இருக்கிறது. இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பது தெரியவந்ததுமே பல மாநிலங்களிலும் பாஜக தொண்டர்கள் வெடிகளைக் கொளுத்தியும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

(11:40 AM) இமாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றதையடுத்து சிம்லாவில் பாஜக தலைமையகத்தின் முன் அக்கட்சித் தொண்டர்கள் வெடிகள் கொளுத்திக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

(12:54 PM) சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் பாஜக மாநிலத் தலைமையகத்தில் கூடிய தொண்டர்கள் ஆரவாரத்துடன் வெற்றி முழக்கமிட்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியதுடன் வெடிகளைக் கொளுத்திக் கொண்டாடினர்.

(12:13 PM) வாக்கு எண்ணிக்கை தொடங்கித் தொகுதி நிலவரங்களை அறிவித்தபோதே பாஜக பெரும்பான்மை பெறும் எனத் தெரியவந்தது. இதையடுத்து மும்பையில் மகாராஷ்டிர மாநிலத் தலைமை அலுவலகத்தில் பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். வண்ணப்பொடிகளை வீசி ஆடிப் பாடி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

(1:30 PM) இதேபோல் புனேயிலும் பாஜக அலுவலகத்தின் முன் அக்கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் வெடிகள் கொளுத்தியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

(3:15, 3:18, 3:28 PM)இருமாநிலத் தேர்தல்களில் பாஜக ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெறும் எனத் தெரிந்ததை அடுத்து டெல்லியில் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் கூடி வெற்றி முழக்கமிட்டனர். மக்களுக்கு இனிப்பு வழங்கியும், வெடிகளைக் கொளுத்தியும் ஆடிப்பாடியும் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கட்சி அலுவலகத்துக்குத் தேசியத் தலைவர் அமித்ஷா வரும்போது அவர் மீது பூமழை பொழிந்து அவரை வரவேற்றனர்.

(12:27, 2:54 PM) மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலிலும் பாஜக அலுவலகத்தின் முன் கூடிய அக்கட்சியின் தொண்டர்கள் வெடிகளைக் கொளுத்திக் கொண்டாடினர். இந்த வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதையே இது காட்டுவதாகத் தெரிவித்தார். பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கிக் கொண்டுசெல்வார் என்றும் சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன