Advertisement

இன்று கூடுகிறது GST ஆலோசனைக்குழு – ரியல் எஸ்டேட்டையும் GST-க்குள் கொண்டு வரத் திட்டம்?

பெட்ரோலியப் பொருட்களின் கடுமையான விலை உயர்வை அடுத்து, அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லீ தலைமையில் இன்று ஜிஎஸ்டி ஆலோசனைக்குழு கூடுகிறது. மாநில அரசுகள் மதிப்புக்கூட்டு வரியைக் குறைக்க ஒப்புக் கொண்டால் இப்பிரச்சினையில் தீர்வு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தவாரம் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், செய்தியாளர்களுக்கு பதில் அளிக்கையலில், பெட்ரோல் மீதான வாட்வரியை மாநில அரசுகள் குறைக்க முன்வந்தால், 2 சதவீதம கலால் வரியை மத்திய அரசு குறைக்கும் என்று தெரிவித்தார்.

இது தவிர மேலும் 60 க்கும் மேற்பட்ட பொருட்களின் விலையைக் குறைப்பதற்கும் ஜிஎஸ்டி குழு இன்றையக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்தும் ஜிஎஸ்டி குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன