Advertisement

இந்தோனேசியாவில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் பீதி

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகள் அருகே நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6 புள்ளி 5 ஆகப் பதிவானதாகவும், கடலுக்கு அடியில் 91 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது.20 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் ஜகார்தாவில் கட்டடங்கள் குலுங்கின, மக்கள் பீதியடைந்து வீதிகளுக்கு ஓடினர். உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்த விவரம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன