இந்துஸ்தான் யூனிலிவர் முன்னாள் ஊழியர்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தில் பணியாற்றிய போது, நோய் பாதிப்பு ஏற்பட்டதற்கு நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

கொடைக்கானலில் நடந்த இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தில் பாதரச தெர்மாமீட்டர் தயாரிக்கும் பிரிவில் பணியாற்றிய போது, பாதரச நச்சுதன்மை காரணமாக தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கு இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் இழப்பீடு வழங்காததை கண்டித்து, கொட்டும் மழையிலும் பெண்கள் உள்பட ஏராளமானோர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன