Advertisement

இந்தி நடிகை பிரீத்தி ஜெயினுக்கு மும்பை நீதிமன்றம் 3 ஆண்டு சிறை விதித்து தீர்ப்பு

திரைப்பட இயக்குநரை கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்ற வழக்கில் இந்தி நடிகை பிரீத்தி ஜெயினுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இந்தி திரைப்பட இயக்குநர் மதுர் பந்தர்கர், தனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக நடிகை பிரீத்தி ஜெயின் தெரிவித்திருந்தார். உறுதியளித்தபடி, திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்காததால், இயக்குநர் மதுர் பந்தர்கரை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தார். இதனிடையே, இயக்குநர் மதுர் பந்தர்கரை கொலை செய்ய கூலிப்படைக்கு முதற்கட்டமாக 75 ஆயிரம் ரூபாய் பணம் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் இயக்குநரை கொலை செய்யாததால், தான் கொடுத்த பணத்தை நடிகை பிரீத்தி ஜெயின் திருப்பிக் கேட்டபோது இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையறிந்த போலீசார், நடிகை பிரீத்தி ஜெயின் மற்றும் கூலிப்படையினர் மீது வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், நடிகை பிரீத்தி ஜெயின் மற்றும் கூலிப்படைத் தலைவன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டும், கூலிப்படையைச் சேர்ந்த மற்றொருவருக்கு 2 ஆண்டும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன