Advertisement

இந்திய பங்குச் சந்தைகள் 4 நாட்களாக உயர்வு

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வுடன் நிறைவடைந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகள் உயர்ந்து, 33 ஆயிரத்து 478 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி வர்த்தக நேர முடிவில் 28 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 326 ஆக இருந்தது. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக, இன்றைய வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. தொடர்ந்து பங்குச்சந்தைகள் நாள் முழுக்க உயர்வுடன் நீடிக்கவே வர்த்தகம் உயர்வுடனேயே நிறைவடைந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன