Advertisement

இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அரசு 5வது முறையாக சம்மன்

எல்லையில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபடுவதாகக் கூறி, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அரசு 5வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் படையினர், எல்லைக்கு அப்பால் இருந்து தொடர்ந்து 4வது நாளாக நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதலால், 5 ராணுவ வீரர்களும், 6 அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், பாகிஸ்தான் படையிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதருக்கு, பாகிஸ்தான் அரசு 5வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, 4 முறை சம்மன் அனுப்பிய பாகிஸ்தான், நேற்று இந்தியப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறி, மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன