இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியுடன் கைகலப்பு 3 பேர் கைது

மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான முகமது ஷமி, மேற்கு வங்கம் மாநிலம் ஜாதவ்பூரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய முகமது ஷமி வீடு வந்த பின்னரும், பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக முகமது ஷமி அளித்த புகாரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் 3 பேரை கைது செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன