இந்திய கடற்படை வசமுள்ள இலங்கை படகுகளை விடுவிக்க உத்தரவு

இலங்கை மீனவர்களின் படகுகளை விடுவிக்க இந்தியஅரசு உத்தரவிட்டதையடுத்து, 7 பேர் கொண்ட அந்நாட்டு மீனவர் குழுவினர் நாகை வந்துள்ளனர்.
இலங்கையில் இருந்து எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து வருகிறார்கள். இந்த படகுகளை நல்லெண்ண அடிப்படையில் திரும்ப ஒப்படைக்க இந்தியஅரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில் படகுகளை மீட்க 7 பேர் கொண்ட மீனவர் குழுவினர் நாகை வந்தனர். அவர்களின் படகுகள் மிகவும் பழுதாகி இருந்த நிலையில் நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் தங்கள் கிராமத்தின் சார்பில் 5 லட்சம் நிதிஉதவி அளித்து, படகுகளை சீர்செய்வதற்கான உதவிகளையும் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன