Advertisement

இந்திய – இஸ்ரேல் உறவு சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பெருமிதம்

இந்தியாவுடனான உறவு சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆறுநாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நேதன்யாஹூ, மும்பையில் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு சொர்க்கத்தில் நிச்சியக்கப்பட்டது என்றும், இருநாடுகளும் உண்மையான கூட்டாளிகள் என்றும் கூறினார்.

இந்திய நிறுவனங்கள் புதுமையை நோக்கி முன்னேற வேண்டும் என்றும், அதற்கான ஊக்கத்தை அளிப்பதே இஸ்ரேலின் கடமை எனவும் நேதன்யாஹூ தெரிவித்தார். இதன் பின்னர் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிர்தப்பிய 11 வயதுச் சிறுவன் மோஷேவை சந்தித்தார். வெள்ளிக்கிழமை காலை தமது இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேதன்யாஹூ இஸ்ரேல் திரும்புகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன