இந்திய-அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை

இந்திய-அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் டெல்லியில் பேச்சு நடத்தி வருகின்றனர். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் 2 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வந்தார். டெல்லி வந்திறங்கிய அவரை, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாகச் சென்று வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் நிர்மலா சீதாராமன்-ஜேம்ஸ் மேட்டிஸ் தலைமையில் இருநாட்டு குழுவினரும் பேச்சு நடத்தி வருகின்றனர். போர் விமானங்கள் வாங்குவது உள்ளிட்டு, பாதுகாப்புத்துறை தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் இந்த பேச்சுவார்த்தையில் இறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன