இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது – செல்லூர் ராஜூ

இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார் பேட்டை நேதாஜி நகர்பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுசூதனன் ஆகியோர் பார்வையிட்டனர். ஆய்விற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன