இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

சிந்து நதியில் கிஷன் கங்கா மற்றும் ராட்டில் என்ற 2 நீர் மின் நிலையங்களை அமைப்பதற்கு இந்தியா திட்டமிட்டது. இதுபோன்ற நீர் மின் திட்டங்களால் தங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என பாகிஸ்தான் குற்றம்சாட்டி வந்தது. இந்த விவகாரத்தை தீர்த்து வைக்கும் பொறுப்பு உலக வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இரு நாடுகள் இடையே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை என உலக வங்கி கூறியுள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என உலக வங்கி கூறினாலும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி குறிப்பிடப்படவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!