Advertisement

இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையே இன்று தொடங்குகிறது 2-வது கிரிக்கெட் டெஸ்ட் – பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, 3 இருபது ஓவர் போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது.

கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் ஒன்றரை மணிக்குப் போட்டி தொடங்கும். இரு நாட்டு வீரர்களும் விளையாட்டு மைதானத்தில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன