Advertisement

இந்தியா, சீன உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் சீன பிரதமர் லீ கெக்கியாங்கைச் ((Li Keqiang)) சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனை இரு அண்டை வீட்டுக்காரர்களின் ஆழ்ந்த பேச்சு என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ வர்ணித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியா, சீனா இடையே இருந்த கசப்பான உறவுகள் குறிப்பாக டோக்லாம் பிரச்னை குறித்தும், பதான்கோட் தாக்குதலில் முக்கியத் தீவிரவாதியான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் சர்ச்சைகள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் விவாதித்தாகவும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன