Advertisement

இந்தியா, இஸ்ரேல், அமெரிக்க கூட்டுறவு இஸ்லாமிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் – ராஜா ரப்பானி

இந்தியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள கூட்டுறவு, இஸ்லாமிய நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவை ஆட்சிக்குழுத் தலைவர் ராஜா ரப்பானி தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹரானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரப்பானி, இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள உறவை எதிர்கொள்ள, இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவை எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது பாகிஸ்தானுக்கும், ஈரானுக்கும் நேர்ந்துள்ள அனுபவம், எதிர்காலத்தில் பிற இஸ்லாமிய நாடுகளுக்கும் நேரலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஜெருசலேம் நகரின் சட்ட மற்றும் வரலாற்று ரீதியான மாண்பைக் குலைக்க அமெரிக்கா எடுத்த முயற்சிக்கு, பாகிஸ்தான் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும் ரப்பானி கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன