இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி, ஐதராபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

20 ஓவர் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. ஏற்கெனவே ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வென்று, 20 ஓவர் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் 20 ஓவர் தொடரையாவது வென்றாக வேண்டும் என்ற ஆவலில் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி விளையாடும். எனவே இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன