Advertisement
Advertisement

இந்தியாவிற்கு போர் விமானங்களை தயாரிக்க விரும்பும் அமெரிக்க நிறுவனங்கள்

இந்தியாவிற்குத் தேவையான போர் விமானங்களைத் தயாரிக்க விரும்பும் அமெரிக்க நிறுவனங்கள், தொழில்நுட்பக் கட்டுப்பாட்டை தங்கள் வசமே வைத்திருக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவிற்குத் தேவையான போர் விமானங்களை வழங்க அமெரிக்காவின் (Lockheed Martin) லோக்ஹீட் மார்டின் மற்றும் போயிங் (Boeing) ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. லோக் ஹீட் நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிப்புத் தொழிற்சாலையைத் தொடங்கவும் முன்வந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க-இந்திய வர்த்தகக் குழுமம் விமான தொழில் நுட்பக் கட்டுப்பாட்டு உரிமையை அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வசமே வைத்திருக்க சம்மதித்து உறுதி அளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும் இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், இந்த விஷயத்தில் பொதுவான சம்மதம் தெரிவிக்க முடியாது என்றும் ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒப்பந்தம் வித்தியாசப்படும் எனவும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன