Advertisement

இந்தியாவின் தலைநகரம் டெல்லி என அரசியலமைப்பில் உள்ளதா? டெல்லி அரசு வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்

இந்தியாவின் தலைநகரம் டெல்லி என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதா? என அம்மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

டெல்லியை ஆள்வதில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது? என்பது தொடர்பான வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட பெஞ்ச் முன் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதாடினார். அப்போது, தேசிய தலைநகர் டெல்லி யூனியன் பிரதேச சட்டம் என்று ஒன்று இருந்தாலும், இந்தியாவின் தலைநகரம் டெல்லி என அரசியல் அமைப்பிலோ சட்டத்திலோ குறிப்பிடப்படவில்லை என இந்திரா ஜெய்சிங் தெரிவித்தார்.

மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள செயல் அதிகாரங்கள் குறித்து அரசியலமைப்பில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதைப் போலவே, டெல்லி விஷயத்திலும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்திரா ஜெய்சிங் நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன