இத்தாலியில் பரவி வரும் காட்டுத்தீயால் அழிந்து வரும் வனப்பகுதி

இத்தாலி நாட்டில் வனப்பகுதியில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த, தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர். அந்நாட்டில் சுசா ((Susa)) பள்ளத்தாக்கின் அருகே உள்ள மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் காட்டுத்தீ உருவானது. வறட்சி காரணமாக பற்றிய தீ, பலத்த காற்றினால் வேகமாக பரவி வருகிறது.

தீப் பற்றி எரியும் பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை நூற்றுக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பு கருகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன