Advertisement
Advertisement

ஆஸ்திரேலியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொள்ளும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து தேசிய அஞ்சல் கணக்கெடுப்பு நிறுவனம் அந்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 61 சதவீதத்தினர் ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன