Advertisement
Advertisement

ஆளும் கட்சி நீக்கியுள்ள ராபர்ட் முகாபே பதவி விலக முடியாது என அறிவிப்பு-ஜிம்பாப்வேயில் குழப்பம்

ஜிம்பாப்வே அதிபரை ஆளும் கட்சி நீக்கியுள்ள நிலையில், பதவி விலக முடியாது என ராபர்ட் முகாபே அறிவித்துள்ளதால் அங்கு குழப்பம் நீடித்து வருகிறது.

ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகால அதிபராக இருக்கும், 94 வயது முகாபேக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரது ஆடம்பரத்தை எதிர்த்து மக்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா-வை திடீரென அவர் பதவியிலிருந்து நீக்கியதால், ஆளும் ஜிம்பாப்வே தேசிய யூனியன் கட்சியில் பிளவு ஏற்பட்டதோடு, ஜிம்பாப்வேயில் மீண்டும் புரட்சி வெடிக்கும் சூழல் உருவானது… துணை அதிபருக்கு ஆதரவாக இருந்த ராணுவ தளபதி, தலைநகர் ஹராரேவில் பீரங்கிகளையும், படை வீர ர்களையும் குவித்து ராணுவக் கட்டிப்பாட்டிற்குள் ஆட்சியை கொண்டுவந்தார்.

இதையடுத்து, கடந்த 14ஆம் தேதி முதல்ராபர்ட் முகாபே குடும்பத்துடன் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அர் பதவி நீக்கம் செய்து, நாடு கடத்துவது குறித்து மாகாண ஆளுநர்கள் மற்றும் ஆளும்கட்சியின் அவசர கூட்டம் தலைநகர் ஹராரேவில் நடைபெற்றது. அதில், ராபர்ட் முகாபேவை ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியும் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை அதிபர் நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஆதரித்து மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைடுத்து, ராணுவ அதிகாரிகளுடன் முகாபே ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அதிபர் பதவியில் இருந்து தாம் விலக முடியாது என முகாபே தொலைக்காட்சி மூலம் அறிவித்துள்ளதால் அங்கு சிக்கல் நீடித்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன