ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடந்த மாதம் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரியுள்ளனர். தினகரன் தரப்பினரும் ஆளுநரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர். இதனிடையே சட்டமன்றத்தைக் கூட்டும்படி கோரி திமுக தாக்கல் செய்த வழக்கு, வரும் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *