Advertisement

ஆளுநர் அரசு அதிகாரிகளை சந்திப்பதால் மாநில சுயாட்சி பாதிக்கப்படாது – அமைச்சர் அன்பழகன்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசு அதிகாரிகளை சந்திப்பதால் மாநில சுயாட்சி பாதிக்கப்படாது என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக 34வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழக ஆளுநர் அதிகாரிகளை சந்திப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், ஆளுநர் அதிகாரிகளை சந்திப்பதால் மாநில சுயாட்சி பாதிக்கப்படுவதாக கூறுவது தவறு என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன