ஆற்றுக்குச் செல்ல அனுமதி வழங்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உடங்கல் ஆற்றுக்கு வனத்துறை அனுமதி வழங்காததால், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வருசநாடு வனப்பகுதியில் உள்ள உடங்கல் ஆற்றில் துணி துவைப்பதற்காக பொதுமக்கள் சென்றனர். ஆனால் அவர்களை மறித்த வனத்துறையினர் ஆற்றுக்கு செல்ல அனுமதி மறுத்தனர். மேலும் பெண்களை தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மஞ்சனூத்து வனசோதனைச்சாவடியில் கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தை அடுத்து ஆற்றுக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *