Advertisement

RK நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிபட்டியல் வெளியீடு

ஆர்.கே.நகரில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட 59 பேர் களத்தில் உள்ளனர்.

ஆர்.கே.நகரில் கடந்த திங்கட்கிழமையுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் செவ்வாய் கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்கள் முறைப்படி நிரப்பப்படவில்லை என்று கூறி நடிகர் விஷால், தீபா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 72 பேர் களத்தில் இருந்த நிலையில் வேட்பு மனுவை வாபஸ் பெறக் கடைசி நாளான இன்று மாலை 3 மணிக்குள் 13 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன