ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் வெளிப்படையாக கஞ்சா விற்பனை

சென்னை ஆர்.கே நகரில் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் கஞ்சா விற்பனையை போலீசார் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

கண்ணகி நகரில் கடந்த சில மாதங்களுக்கு பள்ளி சிறுவர்களுக்கு போதை சாக்லெட்டுகளை விற்பனை செய்ததாக ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் போதைப் பொருள் விற்பனை மீண்டும் துவங்கியுள்ளது. மறைமுகமாக நடைபெற்று வந்த கஞ்சா, மாவா போன்ற போதை பொருட்களின் விற்பனை, தற்போது பட்டபகலிலேயே வெளிப்படையாக நடைபெறுவதாகவும், கஞ்சா விற்பனையில் பெண்கள்ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. போதைபொருட்கள் விற்பனை குறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறும் அப்பகுதி மக்கள், போதை பொருட்கள் விற்பனையை அறவே ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன