ஆருஷி கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணை

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி கொலை வழக்கில், ஆயுள் தண்டணையை எதிர்த்து பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. கடந்த 2008ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், ஆருஷி தல்வார், என்ற 14 வயது சிறுமி மற்றும் வீட்டு வேலையாள் ஹேம்ராஜ் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோரே கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் 2013ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதித்தது.

தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன