ஆந்திராவில் தொடங்கியது மூன்று நாள் ‘ஏஜி டெக் இந்தியா’ மாநாடு

விசாகபட்டிணத்தில் ஏஜி டெக் இந்தியா (Ag Tech India) என்ற பெயரில் நடைபெறும் மூன்று நாள் விவசாய தொழில்நுட்ப மாநாட்டை, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.

ஆந்திர மாநில அரசு சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், விவசாயத்தில் புகுத்தப்பட வேண்டிய புதிய வழிமுறைகள், அந்தத் துறைக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள், சர்வதேச நாடுகளில் விவசாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த மாநாட்டில் நாளை மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன்சிங் பங்கேற்க உள்ளார். நாளை மறுநாள் நடைபெறும் நிறைவுநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பங்கேற்கிறார். முதல் நாள் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமது மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன