அர்விந்த் கெஜ்ரிவால் – மனோகர்லால் கத்தார் சந்திப்பு

டெல்லி காற்று மாசு விவகாரத்திற்கு தீர்வு காண்பது குறித்து அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், அரியானா முதலமைச்சர் மனோகர்லால் கத்தாரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

டெல்லியில் நிலவும் நச்சுக்காற்று பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை தீ வைத்து கொளுத்தப்படுவதே காற்று மாசுக்கு முக்கிய காரணம் என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு தீர்வு காண்பது குறித்து இரு மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து ஆலோசிக்க முடிவு செய்த அவர், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசைன் உள்ளிட்டோருடன் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார் தலைமையிலான குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து, சண்டிகரிலேயே பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கையும், கெஜ்ரிவால் சந்தித்துப் பேசுகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன