Advertisement

அரிச்சல்முனை கடற்கரையில் ஆமை முட்டைகள் தோண்டி எடுப்பு

ராமேஸ்வரம் அருகே அரிச்சல் முனை கடற்கரையில் ஆமைகள் இட்டுச் சென்றிருந்த முட்டைகளை, குஞ்சு பொறிப்பதற்காக வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.

அரியவகை கடற்தாவரங்கள் அதிகமாக இருப்பதால் மன்னார் வளைகுடா கடல்பகுதி பாதுகாக்கப்பட்ட இடமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் மணலைத் தோண்டி முட்டையிட்டு மூடிவைக்கும். இந்த முட்டைகள் பொதுமக்களின் அறியாமையால் சேதமாவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, அரிச்சல்முனை கடற்கரையில் ஆமைகள் இட்டுச் சென்றிருந்த 128 முட்டைகளை அவர்கள் தோண்டி எடுத்தனர். அவற்றை, கடல் ஆமை முட்டை பாதுகாப்பு மையத்தில் வைத்து குஞ்சு பொறிப்பதற்காக கொண்டு சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன