Advertisement

அரசை முடக்கி இருப்பது, தமது பதவியேற்பு நாள் கொண்டாட்டத்திற்கான ஜனநாயக கட்சியினரின் பரிசு- டிரம்ப் கருத்து

அமெரிக்க அரசை முடக்கி இருப்பது, தமக்கு ஜனநாயக் கட்சியினர் கொடுத்த சிறப்பான பரிசு என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அரசுத் துறைகளை இயக்குவதற்கான நிதி அளிக்கும் இடைக்கால மசோதா செனட் அவையில் தோல்வியுற்றதால் அரசு எந்திரம் முடங்கியது.

இதுகுறித்து பேசியுள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக் கட்சியினர் தங்களது கோரிக்கைகளுக்காக மக்களை பணயம் வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பை விட சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தான் ஜனநாயக் கட்சியினருக்கு முக்கியமாக தெரிவதாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அரசை முடக்கி அரசியல் செய்வதற்கு பதிலாக மசோதாவை நிறைவேற்ற அவர்கள் உதவி இருக்கலாம் என்று கூறிய டிரம்ப், தாம் அதிபராக பதவியேற்ற நாளில், சிறப்பான பரிசைக் கொடுக்க ஜனநாயகக் கட்சியினர் விரும்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன