அரசு மினிபேருந்து நடத்துநரை தாக்கிய பெண் காவலர்

சென்னை குரோம்பேட்டையில் அரசு மினிபேருந்து நடத்துனரை, பெண் காவலர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குரோம்பேட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்த வித்யா, கிண்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார். குரோம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் அரசு மினி பேருந்தில், தமது மூன்று வயது மகளுடன் வித்யா சென்றுள்ளார்.

அப்போது குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று நடத்துனர் கூறியதால், தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நடத்துனர் விஜயக்குமாரை, காவலர் வித்யா அறைந்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் விசாரணை நடத்திய குரோம்பேட்டை போலீசார், காவலர் வித்யாவை எச்சரித்து அனுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *