அரசு குடியிருப்புகளில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்கவேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கிரண்பேடி இன்று காலை லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்புகளை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு பயன்படுத்தாமல் இருந்த அறைகளில் குப்பைகளை அகற்றி மக்கள் வசிக்கும் பகுதியாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *