அரசு ஊழியர்கள் தனி நபர்களுக்கு பணிபுரிவதை அனுமதிக்க முடியாது – ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரியில் ஒவ்வொரு அரசுத் துறையிலும் மனிதவளம் குறித்த தணிக்கையை நடத்த வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுளார். புதுச்சேரி PRTC எனப்படும் போக்குவரத்துத்துறையைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள், எம்.எல்.ஏக்களின் வாகனங்களுக்கு ஓட்டுநர்களாக பணிபுரிந்து வருவதாகவும், ஆனால் ஊதியத்தை PRTC-யில் பெறுகின்றனர் எனவும் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க கிரண்பேடி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையிலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் 64 பேர் பணிபுரிந்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார். எனவே, அரசு ஊழியர்களை தனி நபர்களுக்கு பணிபுரிய அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள கிரண்பேடி, புதுச்சேரி தலைமைச் செயலாளர் ஒவ்வொரு துறை வாரியாக உள்ள மனிதவளம், தேவை, குறித்து தணிக்கை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன