அரசுப் பள்ளிக்கு சென்று, கணக்கை தவறாக சொல்லி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்

உத்தரகாண்டில் அரசுப் பள்ளிக்கு சென்ற கல்வித்துறை அமைச்சர், ஆசிரியருக்கு கணக்கு தெரியவில்லை எனக்கூறி விட்டு, தானே கணக்கை தவறாக சொல்லி கொடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனில் உள்ள பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அரவிந்த் பாண்டே, 8ஆம் வகுப்புக்கு சென்று கணக்கு ஆசிரியையிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

மைனஸ் ஒன்றையும், மைனஸ் ஒன்றையும் கூட்டினால் விடை என்ன வரும் என்ற கேள்விக்கு மைனஸ் டூ வரும் என சரியாக ஆசிரியை பதிலளித்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த அமைச்சர், விடை ஜீரோ தான் வரும் என்றும், ஆசிரியைக்கு கணக்கு தெரியவில்லை என்றும் குறைகூறியுள்ளார்.

செய்தியாளர்கள் எடுத்த இந்த வீடியோ மாநிலம் முழுவதும் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினரும் போராடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!